கவர்னர் ஆர்.என்.ரவியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
|பட்டியலின ஊராட்சி தலைவர் பதவியேற்பு விவகாரம் தொடர்பான கவர்னரின் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் துரைமுருகன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
சென்னை,
பட்டியலின ஊராட்சி தலைவர் பதவியேற்பு விவகாரம் தொடர்பான கவர்னரின் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் துரைமுருகன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் நாயக்கனேரி பட்டியலின ஊராட்சிமன்ற தலைவர் விவகாரத்தில் ஆளுநர் அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசுவதாக அவர் தெரிவித்து உள்ளார். மேலும் இதற்கு தனது கண்டனத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
தமிழ்நாட்டின் சமூகநீதியால் பிறந்துள்ள அமைதிக்கு, குந்தகம் விளைவித்து வருவது ஆளுநருக்கு அழகல்ல என்றும்,அரசியல் பேச வேண்டும் என்றால், அரசியல் தலைவராக மாறி தாராளமாக ஆளுநர் தன் கருத்தை தெரிவிக்கட்டும் , அதற்கு பதிலடி கொடுக்க நாங்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களுமே தயாராக இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
மேலும் ஐகோர்ட் உத்தரவினை படிக்காமல் பாஜக செய்தி தொடர்பாளர் போல ஆளுநர் திட்டமிட்டு தமிழக அரசின் மீது அவதூறு பரப்புவதா, என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் சமூக நீதியை குலைக்கும் வகையில் பரப்புரை செய்வது அவருடைய பதவிக்கு அழகு அல்ல. நாயக்கனேரி ஊராட்சி மன்றம் பற்றிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் மட்டுமே அங்கு பதவியேற்பு நடைபெறாமல் உள்ளது, என்று கூறினார்.