< Back
மாநில செய்திகள்
பெண்களை ஓசி பஸ்ஸில் பயணம் செய்பவர்கள் என்ற அமைச்சர் பேச்சிற்கு  டிடிவி தினகரன் கண்டனம்
மாநில செய்திகள்

பெண்களை 'ஓசி பஸ்ஸில் பயணம் செய்பவர்கள்' என்ற அமைச்சர் பேச்சிற்கு டிடிவி தினகரன் கண்டனம்

தினத்தந்தி
|
26 Sept 2022 1:27 PM IST

பெண்களை 'ஓசி பஸ்ஸில் பயணம் செய்பவர்கள்' என்று அமைச்சர் பேசியிருப்பதற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பெண்களைப் பார்த்து 'ஓசி பஸ்ஸில் பயணம் செய்பவர்கள்' என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பேசியிருப்பதாக வெளியாகியுள்ள காணொளி அதிர்ச்சியளிக்கிறது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "அரசு விழாவில் பங்கேற்ற பெண்களைப் பார்த்து 'ஓசி பஸ்ஸில் பயணம் செய்பவர்கள்' என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பேசியிருப்பதாக வெளியாகியுள்ள காணொளி அதிர்ச்சியளிக்கிறது. அமைச்சரின் இந்தப் பேச்சு கண்டனத்திற்குரியது.

பெண்கள் இலவசமாக அரசுப் பேருந்தில் பயணிக்கும்போது ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள், அவர்களை ஏளனமாக பேசக்கூடாது என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருந்தார். இது அவர்களுக்கு மட்டும்தான் பொருந்துமா? அமைச்சர்களுக்குப் பொருந்தாதா?

மூத்த அமைச்சர் ஒருவரே இப்படி பேசுகிறார் என்றால் தி.மு.க.வினரின் உண்மையான மனநிலை எது என்பதை நம்மால் உணர முடிகிறது. பெண்களை இப்படி இழிவுபடுத்துவதும் தி.மு.க.வினர் கண்டுபிடித்திருக்கும் திராவிட மாடலின் அங்கம்தானோ?!" என்று கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்