கள்ளக்குறிச்சி
மலையம்மன் கோவிலுக்கு செல்லும் சாலையை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
|தியாகதுருகம் மலையம்மன் கோவிலுக்கு செல்லும் சாலையை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
தியாகதுருகம்
வரலாற்று சிறப்புமிக்க தியாகதுருகம் மலைக்கோட்டையில் திப்புசுல்தான், ஹைதர் அலி ஆகியோர் தங்கி இருந்து ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டனர். அவர்கள் பயன்படுத்திய பீரங்கிகளை இன்றும் தியாகதுருகம் மலை கோட்டையில் காணலாம். அதே போல் மேற்கு பகுதியில் சமணர்கள் வாழ்ந்த இடங்களும் மலையம்மன் கோவிலும் உள்ளன. இதை காண்பதற்காக தினசரி சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதை மேம்படுத்தும் விதமாக மலையம்மன் கோவிலுக்கு செல்லும் சாலையை அகலப்படுத்த வேண்டும் என தியாகதுருகம் பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்திருந்தனர். அதன்படி இ்ந்த சாலையை அமைச்சர் எ.வ.வேலு நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார், கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட செயலாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள், ஒன்றியக்குழு தலைவர் தாமோதரன், துணை தலைவர் நெடுஞ்செழியன், தலைமை பொதுக்குழு உறுப்பினரும் மவுண்ட் பார்க் பள்ளி தாளாளருமான மணிமாறன், நகர செயலாளர் மலையரசன், ஊராட்சி மன்ற தலைவர் அமுதா தட்சிணாமூர்த்தி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.