< Back
மாநில செய்திகள்
கவர்னர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
மாநில செய்திகள்

கவர்னர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

தினத்தந்தி
|
13 March 2024 9:23 PM IST

பட்டமளிப்பு விழாவில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

சென்னை,

சென்னை வேப்பேரியில் நடைபெற்ற கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தின் 23-வது பட்டமளிப்பு விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார். இந்த விழாவில் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தரும், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்காமல் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்துள்ளார். அண்மையில் கால்நடை அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தரின் பதவிக்காலத்தை அரசின் பரிசீலனை இல்லாமல் ஓராண்டுக்கு நீட்டித்து கவர்னர் உத்தரவு பிறப்பித்ததால், பட்டமளிப்பு விழாவை அமைச்சர் புறக்கணித்திருப்பதாக கூறப்படுகிறது.





மேலும் செய்திகள்