< Back
மாநில செய்திகள்
நீ விளையாடு நண்பா  உதயநிதி ஸ்டாலின் பதிவுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் பதிவு

filepic

மாநில செய்திகள்

"நீ விளையாடு நண்பா" உதயநிதி ஸ்டாலின் பதிவுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் பதிவு

தினத்தந்தி
|
11 Sep 2023 12:18 PM GMT

உதயநிதி ஸ்டாலினின் கொசுவர்த்தி சுருள் பதிவுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பயர் எமோஜி பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

சனாதன ஒழிப்பு விவகாரத்தில் திமுகவை, டெங்கு- காலரா- மலேரியா என்றெல்லாம் பாஜகவினர் இடைவிடாமல் விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனாலும் சனாதனம் ஒழிப்பு தான் இலக்கு என்பதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் உறுதியாக உள்ளனர்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு வழக்கம் போல திமுக கூட்டணி கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் இன்று திடீரென அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒரு போட்டோ பகிர்ந்தார். அதாவது கொசுக்களை அழிக்கக் கூடிய கொசுவர்த்தி சுருள் எரிந்து கொண்டிருக்கும் படம் தான் அது. அதற்கு எந்த கமெண்ட்டும் எழுதாமல் வெறும் படத்தை மட்டுமே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டிருந்தார்.

இதனால் சமூக வலைதளங்களில் உதயநிதி ஸ்டாலினின் இந்த ஒற்றை போட்டோ படு வேகமாக ஹாட் டாப்பிக்கானது. சனாதனத்தை முன்வைத்தும் பாஜகவினரை விமர்சித்தும், ஒப்பிட்டும் ஏராளமான கருத்துகள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மிக நெருங்கிய நண்பரான பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது சமூக வலைதளப் பக்கங்களில் உதயநிதி ஸ்டாலினின் இந்த போட்டோ பக்கத்தை பகிர்ந்துள்ளார். அத்துடன் "நீ விளையாடு நண்பா" என்ற கமெண்ட்டும் "பயர் " எமோஜும் போட்டுவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்