< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
வெள்ளகோவில் அரசுப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் ஆய்வு
|26 July 2022 2:56 PM IST
திருப்பூர் அருகே உள்ள அரசுப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர்:
திருப்பூரில் இருந்து வெள்ளகோவில் வழியாக காரில் வந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெள்ளகோவில் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியின் சத்துணவு கூடம், பள்ளி வகுப்பறைகளுக்கு சென்று பார்வையிட்டார்.
பின்னர் மாணவ மாணவியர்களிடம் நன்கு படித்து மருத்துவர், பொறியாளர், காவல்துறை உயர் அதிகாரியாக ஆகவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும் மாற்றுத்திறனாளி பள்ளி ஆயத்த மையத்திற்கு சென்று பார்வையிட்டார். பள்ளி ஆசிரியர்களிடம் குழந்தைகளின் கல்வி தரம் பற்றி கேட்டறிந்தார்.