< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பஹ்ரைன் வாழ் தமிழ் மாணவர்களுக்கு தமிழ் பாடப்புத்தகங்கள் - அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார்
|16 March 2024 2:23 AM IST
பஹ்ரைன் வாழ் தமிழ் மாணவர்கள் நலன் கருதி 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கான 138 தமிழ் பாடப்புத்தகங்களை அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார்.
சென்னை,
பஹ்ரைன் வாழ் தமிழ் மாணவர்கள் நலன் கருதி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் 9 மற்றும் 10-ம் வகுப்பு வரையிலான 138 தமிழ் பாடப்புத்தகங்களை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார். இந்தப் புத்தகங்களை மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ லியோனி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குனர் ஆர். கஜலட்சுமி மற்றும் இணை இயக்குனர் சங்கர சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.