< Back
மாநில செய்திகள்
ராசிபுரம் பகுதியில்  ரூ.76¾ லட்சத்தில் புதிய திட்டப்பணிகள்   அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்
நாமக்கல்
மாநில செய்திகள்

ராசிபுரம் பகுதியில் ரூ.76¾ லட்சத்தில் புதிய திட்டப்பணிகள் அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்

தினத்தந்தி
|
22 Aug 2022 10:28 PM IST

ராசிபுரம் பகுதியில் ரூ.76¾ லட்சத்தில் 9 புதிய திட்டப்பணிகளை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்.

ராசிபுரம்:

ராசிபுரம் பகுதியில் ரூ.76¾ லட்சத்தில் 9 புதிய திட்டப்பணிகளை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

ராசிபுரம் பகுதியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பல்வேறு பணிகளுக்கான தொடக்க நிகழ்ச்சி நடந்தது. அதன்படி பிள்ளாநல்லூர் பேரூராட்சியில் ரூ.5.25 லட்சம் மதிப்பில் சமுதாய கழிப்பிடம், ரூ.8 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, பொன்குறிச்சி ஊராட்சியில் ரூ.9.50 லட்சத்தில் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி அமைத்து குடிநீர் வினியோக குழாய்கள் பதிக்கும் பணி, முத்துக்காளிப்பட்டியில் ரூ.9.50 லட்சத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்து குடிநீர் வினியோக குழாய் பதிக்கும் பணியை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்.

அதேபோல் போடிநாயக்கன்பட்டியில் ரூ.6 லட்சத்தில் பெண்கள் ஓய்வறை கட்டுதல், சிங்களாந்தபுரத்தில் ரூ.9.50 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி, மோளப்பாளையம் அருந்ததியர் காலனியில் ரூ.6.60 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி, வெண்ணந்தூர் அலவாய்ப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.10 லட்சத்தில் சுற்றுச்சூழல் அமைக்கும் பணி, பல்லவன்நாயக்கன்பட்டியில் ரூ.10 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து குடிநீர் வினியோக குழாய்கள் பதிக்கும் பணி மற்றும் ரூ.2.36 லட்சத்தில் குடிநீர் வினியோக விரிவாக்க பணிகள் உள்பட ரூ.76.71 லட்சத்தில் 9 புதிய கட்டுமான பணிகளை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்.

மேஜை, நாற்காலிகள்

இதற்கிடையே வெண்ணந்தூர் அலவாய்ப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.22.50 லட்சத்தில் 150 இணை மேஜை, நாற்காலிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கினார். அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டு மேஜை, நாற்காலிகளை மாணவர்களின் பயன்பாட்டிற்காக வழங்கினார். ராசிபுரம் வடுகம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.7.50 லட்சத்தில் 50 இணை மேஜை நாற்காலிகளையும் அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிகளில் முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரி, ராசிபுரம் ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஏ.ஆர்.துரைசாமி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆர்.எம்.துரைசாமி, பாலச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. ராமசுவாமி, பிள்ளாநல்லூர் பேரூராட்சி தலைவர் சுப்பிரமணியம், புதுப்பட்டி பேரூராட்சி துணைத்தலைவர் ஜெயக்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் அருள், சோமசுந்தரம், தாசில்தார் கார்த்திகேயன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்