< Back
மாநில செய்திகள்
நாமக்கல்லில்  85 பயனாளிகளுக்கு ரூ.3¼ கோடியில் நலத்திட்ட உதவிகள்  அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல்லில் 85 பயனாளிகளுக்கு ரூ.3¼ கோடியில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்

தினத்தந்தி
|
14 July 2022 3:53 PM GMT

நாமக்கல்லில் 85 பயனாளிகளுக்கு ரூ.3¼ கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

நாமக்கல்லில் 85 பயனாளிகளுக்கு ரூ.3¼ கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு எம்.பி.க்கள் கே.ஆர்.என். ராஜேஸ்குமார், ஏ.கே.பி.சின்ராஜ், எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் கலந்து கொண்டு பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் ரூ.3 கோடியே 31 லட்சம் மதிப்பீட்டில் 85 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முதல்-அமைச்சரின் பொது நிவாரணம்

அதன்படி சமூக பாதுகாப்புத்துறை- குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் கொரோனா பெருந்தொற்றால் பெற்றோரில் ஒருவரை இழந்த 68 குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியாக ரூ.2 கோடியே 4 லட்சத்திற்கான காசோலை, பெற்றோரில் இருவரையும் இழந்த 3 குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.15 லட்சத்துக்கான காசோலை, மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 8 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகள், தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு தொழில் தொடங்க தலா ரூ.75 ஆயிரம் வீதம் ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான தொடக்க நிதிக்கான காசோலை, கால்நடை மற்றும் பராமரிப்புத்துறையின் சார்பில் பெண்களை தொழில் முனைவோராக உருவாக்கிட 100 சதவீத மானியத்தில் 3 பயனாளிகளுக்கு 5 வெள்ளாடுகள் என 85 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

இதில் நாமக்கல் நகராட்சி தலைவர் கலாநிதி, மாவட்ட வருவாய் அலுவலர் கதிரேசன், மகளிர் திட்ட இயக்குனர் பிரியா, உதவி கலெக்டர்கள் மஞ்சுளா, இளவரசி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்பிரமணியன், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் தேவிகா ராணி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஸ்குமார் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்

மேலும் செய்திகள்