நாமக்கல்
பாண்டமங்கலத்தில்ரூ.90.76 லட்சத்தில் புதிய வாரச்சந்தை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார்
|பரமத்திவேலூர்:
பாண்டமங்கலத்தில் ரூ.90 லட்சத்து 76 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய வாரச்சந்தையை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார்.
வாரச்சந்தை
பரமத்திவேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் பேரூராட்சியில் ரூ.90 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள வாரச்சந்தை திறப்பு விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் உமா தலைமை தாங்கினார். வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் கலந்து கொண்டு வாரச்சந்தையை திறந்து வைத்தார்.
பின்னர் அமைச்சர் பேசுகையில், பாண்டமங்கலம் பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.90.76 லட்சம் மதிப்பீட்டில் வாரச்சந்தை கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. சந்தையின் மூலம் இப்பகுதியை சேர்ந்த 350 குடும்பங்கள் பயன்பெற உள்ளன.
வளர்ச்சி திட்டப்பணிகள்
பாண்டமங்கலம் பேரூராட்சியில் 3 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி அமைத்தல், சமுதாயக்கூடம் கட்டுதல், சமுதாயக்கூடம் புதுப்பித்தல், மழைநீர் வடிகால் அமைத்தல், சிமெண்டு சாலை அமைத்தல், சாலையை பலப்படுத்துதல், ரேஷன் கடை அமைத்தல் என ரூ.1.37 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ரூ.2.45 கோடி மதிப்பீட்டில் புதிய வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது என்று பேசினார். இதில் கபிலர்மலை ஒன்றியக்குழு உறுப்பினர் சண்முகம், தாசில்தார் கலைச்செல்வி, பாண்டமங்கலம் பேரூராட்சி தலைவர் சோமசேகர், துணைத்தலைவர் முருகவேல், வார்டு உறுப்பினர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.