< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கீழடி அருங்காட்சியகத்தில் மினி திரையரங்கம் - இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்
|9 Feb 2023 9:17 PM IST
கொந்தகை கிராமத்தில் கீழடி அருங்காட்சியகத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் கீழடியில் இதுவரை 8 கட்ட அகழாய்வு பணிகளும், அதை சுற்றியுள்ள அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட பகுதிகளில் 3 கட்ட அகழாய்வு பணிகளும் நிறைவடைந்துள்ளன.
இந்த அகழாய்வுகளில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால பொருட்களை காட்சிப்படுத்துவதற்காக, கொந்தகை கிராமத்தில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் 11.03 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு, அதன் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த அருங்காட்சியகத்தில் கீழடி குறித்த தகவல்களை திரையிடுவதற்காக, 50-க்கும் மேற்ப்போர் அமர்ந்து காணும் வகையில் மினி திரையரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் பணிகள் இன்னும் ஓரிரு வாரங்களில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அருங்காட்சியகத்தை முதல்-அமைச்சர் திறந்து வைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.