< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
மினி மாரத்தான் போட்டி
|28 Nov 2022 3:44 AM IST
பாளையங்கோட்டையில் மினி மாரத்தான் போட்டி நடந்தது
நெல்லை சுகாதார மாவட்டம் சார்பில் மக்கள் சேவையில் 100 ஆண்டுகளாக சேவையாற்றி வரும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பாளையங்கோட்டையில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே தொடங்கிய இந்த மினி மாரத்தான் போட்டியை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். குறிப்பாக சிறுவர், சிறுமிகள் ஆர்வமுடன் போட்டியில் பங்கேற்று ஓடினர்.
இந்த ஓட்டமானது அண்ணா விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி பாளையங்கோட்டை சீனிவாசன்நகர் வரை சென்று மீண்டும் அதே வழித்தடத்தில் அண்ணா விளையாட்டு அரங்கத்திற்கு வந்து முடிவடைந்தது.