< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
மினி மாரத்தான் போட்டி
|11 Sept 2022 10:43 PM IST
ஆண்டிப்பட்டியில், மினி மாரத்தான் போட்டி நடந்தது.
தேனி மாவட்ட தடகள சங்கம் மற்றும் தனியார் அகாடமி சார்பில் ஆண்டிப்பட்டியில் மினி மாரத்தான் போட்டி நடந்தது. மாணவ-மாணவிகளுக்கு 10 கிலோமீட்டர், 7.5 கிலோமீட்டர், 5 கிலோமீட்டர், 2.5 கிலோமீட்டர், 1.5 கிலோமீட்டர் வீதம் தூரம் நிர்ணயிக்கப்பட்டது. ஆண்டிப்பட்டி மேக்கிழார்பட்டி சாலையில் இருந்து தொடங்கியது.
இதில் தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு ஓடினர். இதைத்தொடர்ந்து ஸ்கேட்டிங் போட்டியும் நடந்தது. மாரத்தான் மற்றும் ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதங்கங்களுடன் சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.