< Back
மாநில செய்திகள்
மினி மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டம்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

மினி மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டம்

தினத்தந்தி
|
6 March 2023 12:15 AM IST

மினி மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டம்

நாகையில் பிளாஸ்டிக் இல்லாத கடற்கரை மாவட்டத்தை உருவாக்க வலியுறுத்தி அக்கரைப்பேட்டை மீனவ கிராமம் சார்பில் மினி மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது.

மினி மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டம்

பிளாஸ்டிக் இல்லாத கடற்கரை மாவட்டத்தை உருவாக்க வலியுறுத்தி நாகையில் அக்கரைப்பேட்டை மீனவ கிராமம் சார்பில் மினி மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது. நாகை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய மினி மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டத்தை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், எம்.எல்.ஏ.க்கள் முகம்மதுஷாநவாஸ், நாகை மாலி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த மாரத்தான் ஓட்டம் பால்பண்ணைச்சேரி, காடம்பாடி, பப்ளிக்ஆபீஸ்ரோடு, பெருமாள் கோவில், ெரயில்வே நிலையம் வழியாக 7 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து அக்கரைப்பேட்டை கிராமத்தை சென்றடைந்தது. இதில் ஆண்கள், பெண்கள் என இருபிரிவினருக்கும் தனித்தனியாக ஓட்டம் நடந்தது.

4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள்

இதில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பிளாஸ்டிக் இல்லாத கடற்கரை மாவட்டமாக நாகை மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதில் நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, உதவி கலெக்டர் பிரித்விராஜ், சப்-கலெக்டர் பானோத்ம்ருகேத்லால் மற்றும் அக்கரைப்பேட்டை மீனவ பஞ்சாயத்தார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்