< Back
மாநில செய்திகள்
டெட்ரா பாக்கெட் மூலமாக பால் விற்பனை - ஆவின் நிறுவனம் பதில் அளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
மாநில செய்திகள்

டெட்ரா பாக்கெட் மூலமாக பால் விற்பனை - ஆவின் நிறுவனம் பதில் அளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

தினத்தந்தி
|
29 Sept 2023 6:56 PM IST

டெட்ரா பாக்கெட் மூலமாக பால் விற்பனை செய்வது தொடர்பாக ஆவின் நிறுவனம் பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தவிட்டுள்ளது.

சென்னை,

சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் கண்ணாடி பாட்டில்கள் அல்லது டெட்ரா பாக்கெட் மூலமாக பால் விற்பனையை மேற்கொள்ள ஆவின் நிறுவனத்திற்கு உத்தரவிடக்கோரி தென்மண்டல பசுமை தீர்பாயத்திற்கு மனு ஒன்று அளிக்கப்பட்டது.

இதனை விசாரித்த தீர்ப்பாயம், தமிழக சுற்றுச்சூழல் துறை, ஆவின் நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை இதுகுறித்து பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

மேலும் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக எடுக்கப்பட்ட மாற்று வழி என்ன, அதனை மறுசுழற்சி செய்ய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பவை குறித்து பதில் மனு அளிக்கவும் பசுமை தீர்ப்பாய தென்மண்டல அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்