< Back
மாநில செய்திகள்
கொள்முதல் நிலையம் முன்பு பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்
தர்மபுரி
மாநில செய்திகள்

கொள்முதல் நிலையம் முன்பு பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்

தினத்தந்தி
|
31 Jan 2023 1:00 AM IST

பாலக்கோடு:-

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே எர்ரனஅள்ளி ஊராட்சி பி.கொல்லஅள்ளியில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்துக்கு 300-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பால் வழங்கி வருகின்றனர். கடந்த 3 வாரங்களாக பால் உற்பத்தியாளர்களுக்கு சங்கத்தில் இருந்து பணம் வழங்கப்படவில்லையாம். இதனால் பால் உற்பத்தியாளர்கள் தங்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமலும், கால்நடைகளுக்கு தேவையான தீவனங்களை வாங்க முடியாமலும் சிரமப்பட்டு வந்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பால் உற்பத்தியாளர்கள் நேற்று காலையில் கொள்முதல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்