< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்
கோவில் விழாவில் பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள்
|29 March 2023 12:15 AM IST
கோவில் விழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர்
சாயல்குடி,
சாயல்குடி மாரியம்மன் கோவில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு பால்குடம், தேர் பவனி நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடலுக்குச் சென்று தீர்த்தம் எடுத்து புனிதநீர் கொண்டுவரப்பட்டு அம்மனுக்கு புனித நீரை ஊற்றினர். அம்மனுக்கு 18 வகையான அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு பால்குடம், அக்னிச்சட்டி எடுத்து பெண்கள் ஊர்வலமாக கொண்டு வந்து அம்மனை தரிசித்தனர். கோவிலில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. பின்பு சாயல்குடி சுந்தர விநாயகர் கோவிலில் இருந்து அம்மன் தேர் பவனி, பெண்கள் பூத்தட்டி ஏந்தி நகர்வலமாக வந்து சக்தி மாரியம்மன் கோவில் வரை ஊர்வலமாக சென்றனர். சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை மாரியம்மன் கோவில் நிர்வாக கமிட்டியாளர்கள், விழா குழுவினர் செய்தனர்.