< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
பால்குட ஊர்வலம்
|12 Sept 2023 1:34 AM IST
பாபநாசம் அருகே மகா சந்தன காளியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடந்தது.
பாபநாசம் அருகே பெருமாங்குடி வடக்கு தெருவில் மகா சந்தன காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 8-ம் ஆண்டு பால்குட திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து மேள தாளங்கள் முழங்க பக்தர்கள் பால்குடம், அலகுகாவடி எடுத்து ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.