< Back
மாநில செய்திகள்
மீலாடி நபி விழா
தென்காசி
மாநில செய்திகள்

மீலாடி நபி விழா

தினத்தந்தி
|
6 Oct 2022 12:15 AM IST

செங்கோட்டையில் மீலாடி நபி விழா நடைபெற்றது

செங்கோட்டை:

செங்கோட்டை சுலைமான் நபி ஜூம்மா பள்ளிவாசலில் மீலாடி நபி விழா நடந்தது. பள்ளி ஜமாத் கமிட்டி தலைவர் செய்யது பட்டாணி தலைமை தாங்கினார். ஹாஜி சலீம் முன்னிலை வகித்தார். நபிகள் வரலாறு குறித்து காரி இஸ்மாயில் உலவி சிறப்புரை ஆற்றினார். பின்பு மதரஸா மாணவ- மாணவிகளுக்கு குர்ஆன் ஓதும் போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பள்ளி ஜமாத் கமிட்டி துணைத்தலைவர் உள்ளிமுகம்மது இஸ்மாயில் பரிசு வழங்கினார். இதையடுத்து பள்ளி தலைமை இமாம் செய்யது சுல்தான் பைஜி துஆ ஓதினார். நிகழ்ச்சியில் பள்ளி ஜமாத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார் கலந்து கொண்டனர்.

முடிவில் ஹாஜி சர்தார் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்