< Back
மாநில செய்திகள்
மிலாடி நபி - அரசு விடுமுறைக்கான தேதி மாற்றம்
மாநில செய்திகள்

மிலாடி நபி - அரசு விடுமுறைக்கான தேதி மாற்றம்

தினத்தந்தி
|
9 Sept 2024 5:13 PM IST

மிலாது நபி அரசு விடுமுறை தேதி 17ம் தேதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

இறை தூதரான முகம்மது நபியின் பிறந்த நாளான மிலாது நபி உலகெங்கும் உள்ள இஸ்லாமிய மக்கள் ஒவ்வொரு ஆண்டும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பிறை தெரியாததால், இந்த ஆண்டு மிலாது நபி செப்டம்பர் 17ஆம் தேதி கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை காஜி தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து தமிழக அரசு, மிலாடி நபி அரசு விடுமுறை செப்டம்பர் 17ம் தேதியாக மாற்றம் செய்து அறிவித்துள்ளது. முன்னதாக, செப்டம்பர் 16ம் தேதி தமிழக அரசு விடுமுறை அறிவித்து இருந்த நிலையில், தற்போது தேதி மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்