< Back
மாநில செய்திகள்
மிலாது நபி ஊர்வலம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

மிலாது நபி ஊர்வலம்

தினத்தந்தி
|
29 Sept 2023 1:33 AM IST

வி.களத்தூரில் மிலாது நபி ஊர்வலம் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வி.களத்தூரில் நபிகள் நாயகம் பிறந்த நாளையொட்டி சுன்னத் ஜமாத் பேரியக்கம் சார்பில் 10-ம் ஆண்டு மிலாது நபி ஊர்வலம் நடைபெற்றது. இதனை ஜமாத் தலைவர் குல்முகமது கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஜாமியா பள்ளிவாசலில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று பள்ளிவாசலை வந்தடைந்தது. ஊர்வலத்தில் முஸ்லிம்கள் மற்றும் மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் மாணவ- மாணவிகளுக்கு வினாடி-வினா போட்டி மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்