< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மிக்ஜம் புயல் : சுகாதார பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய சிறப்பு அதிகாரிகள் நியமனம்
|10 Dec 2023 4:05 PM IST
சென்னையில் மண்டலத்திற்கு ஒரு சுகாதார அதிகாரி வீதம் 15 மண்டலங்களுக்கும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை,
மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 3, 4-ந்தேதிகளில் கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சுகாதார பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் மண்டலத்திற்கு ஒரு சுகாதார அதிகாரி வீதம் 15 மண்டலங்களுக்கும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.