< Back
மாநில செய்திகள்
மிக்ஜம் புயல் பாதிப்பு: எம்.எல்.ஏ, எம்.பிக்களின் ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதிக்கு வழங்குவதாக மார்க்சிஸ்ட் அறிவிப்பு
மாநில செய்திகள்

மிக்ஜம் புயல் பாதிப்பு: எம்.எல்.ஏ, எம்.பிக்களின் ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதிக்கு வழங்குவதாக மார்க்சிஸ்ட் அறிவிப்பு

தினத்தந்தி
|
10 Dec 2023 12:13 AM IST

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் எம்.எல்.ஏ, எம்.பிக்களின் ஒரு மாத சம்பளத்தை வழங்குவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

சென்னை,

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளின் ஒரு மாத சம்பளம் வழங்கப்படும் என்று அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கிடும் வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்களது ஒரு மாத ஊதியத்தை முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்