< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்
வேடந்தாங்கலில் குவியும் வெளிநாட்டு பறவைகள்
|2 Jan 2023 3:56 PM IST
வேடந்தாங்கல் ஏரி நிரம்பியதால், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அனைத்து இன பறவைகள் குவிந்து வருகின்றன.
ஏரி நிரம்பியுள்ளதால் பறவைகள் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பறவை ஆர்வலர்கள், சுற்றுலா பயணிகள் என ஏராளமானோர் ஆர்வமாக சென்று பறவைகளை கண்டு ரசிக்கின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த வேடந்தாங்கலில் பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்கு தற்போது வெளிநாட்டு பறவைகள் அதிக அளவில் குவிந்த வண்ணம் உள்ளது. அரையாண்டு விடுமுறை, புத்தாண்டு மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வெளிநாட்டு பறவைகளை பார்வையிட வேடந்தாங்கலில் குவிந்தனர்.