< Back
மாநில செய்திகள்
மிக்ஜம் புயல் நிவாரண நிதி; மத்திய அரசுக்கு அ.தி.மு.க. அழுத்தம் தர வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்
மாநில செய்திகள்

மிக்ஜம் புயல் நிவாரண நிதி; மத்திய அரசுக்கு அ.தி.மு.க. அழுத்தம் தர வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்

தினத்தந்தி
|
10 Dec 2023 11:45 AM IST

மிக்ஜம் புயல் நிவாரண நிதியாக மத்திய அரசு ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியிருப்பது ஏமாற்றம் அளிப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர்,

தமிழகத்திற்கு மிக்ஜம் புயல் நிவாரண நிதியாக 5 ஆயிரம் கோடி ரூபாய் வழங்குவதற்கு மத்திய அரசை அ.தி.மு.க. வலியுறுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-

"மிக்ஜம் புயல் நிவாரண நிதியாக தமிழகத்திற்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரியிருந்தார். ஆனால் மத்திய அரசு, அந்த தொகையில் 5-ல் ஒரு பங்காக ஆயிரம் கோடி ரூபாயை மட்டுமே ஒதுக்க முன்வந்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.

அ.தி.மு.க.வினர் மத்திய அரசோடு நட்புணர்வோடு இருக்கிறார்கள். அவர்கள் மத்திய அரசு அல்லது பிரதமரிடம் தமிழகத்திற்கு 5 ஆயிரம் கோடி நிதி வழங்க வலியுறுத்த வேண்டும்."

இவ்வாறு கூறினார்.

மேலும் செய்திகள்