< Back
மாநில செய்திகள்
மிக்ஜம் புயல் பாதிப்பு; நிவாரணம் வழங்குவது தொடர்பாக ஐகோர்ட்டில் முறையீடு
மாநில செய்திகள்

மிக்ஜம் புயல் பாதிப்பு; நிவாரணம் வழங்குவது தொடர்பாக ஐகோர்ட்டில் முறையீடு

தினத்தந்தி
|
6 Dec 2023 6:03 PM IST

கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

சென்னை,

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி, மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மீட்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்தார்.

அப்போது அவர், கடந்த 2015-ம் ஆண்டு வெள்ளத்தின்போது தனது மனுவின் அடிப்படையில் ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்ததாகவும், அந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், இது சம்பந்தமாக ஜனவரி மாதம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.



மேலும் செய்திகள்