சேலம்
சேலத்தில் பிறந்தநாளையொட்டிஎம்.ஜி.ஆர். சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
|சேலத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சேலம்,
அ.தி.மு.க.வினர் மரியாதை
சேலத்தில் அ.தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி சேலம் அண்ணா பூங்கா மணிமண்டபத்தில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்காடஜலம் தலைமையில் நிர்வாகிகள் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் அருகில் இருந்த ஜெயலலிதாவின் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதையடுத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பாலசுப்பிரமணியன் எம்.எல்.ஏ., அவை தலைவர் பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ. எம்.கே.செல்வராஜ், , மாநகர் மாவட்ட பொருளாளர் பங்க் வெங்காடசலம், கூட்டுறவு சங்க தலைவர் ஜான்கென்னடி, பகுதி செயலாளர்கள் யாதவர்மூர்த்தி, சண்முகம், பாண்டியன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் கனகராஜ், மாநகர் மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் வக்கீல் மகேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஓ.பி.எஸ். அணி, அ.ம.மு.க.,
ஓ.பி.எஸ். அணி சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் தினேஷ் தலைமையில் நிர்வாகிகள் அண்ணாபூங்கா மணிமண்டபத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பலர் கந்து கொண்டனர்.
இதேபோல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மத்திய மாவட்ட செயலாளர் எஸ்.கே.செல்வம் தலைமையில் நிர்வாகிகள் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சேலம் மாநகராட்சி 2-வது வார்டு நரசோதிப்பட்டியில் எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. வார்டு செயலாளர் அசோக்குமார் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகம், கரும்பு ஆகியவை வழங்கினார்.
இனிப்பு
எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி சசிகலா பேரவை சார்பில் எஸ்.எம்.சி. காலனியில் மாநில துணை செயலாளர் ஆறுமுகம் தலைமையில் நிர்வாகிகள் எம்.ஜி.ஆர். புகைப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நிர்வாகிகள் சந்திரன், ராஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.