திண்டுக்கல்
எம்.ஜி.ஆர். நினைவு தினம்
|ஒட்டன்சத்திரத்தில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
ஒட்டன்சத்திரத்தில் அ.தி.மு.க. சார்பில் மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி ஒட்டன்சத்திரம் பஸ்நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். உருவ படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் அ.தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நகர செயலாளர் எஸ்.நடராஜன், ஒட்டன்சத்திரம் கிழக்கு ஒன்றிய செயலாளரும், அம்பிளிக்கை ஊராட்சி மன்ற தலைவருமான என்.பி.நடராஜ், மேற்கு ஒன்றிய செயலாளர் பி.பாலசுப்பிரமணியம், மேற்கு மாவட்ட பொருளாளர் பழனிவேல், தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் அப்பன் என்ற கருப்புசாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் சண்முகராஜ், பேரூர் கழக செயலாளர் குப்புசாமி, பொதுக்குழு உறுப்பினர் உதயம் ராமசாமி, மேற்கு மாவட்ட மீனவர் அணி செயலாளர் மனோகரன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.