சேலம்
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைக்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை
|அ.தி.மு.க. 52-வது ஆண்டு விழாவையொட்டி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா சேலம் அண்ணா பூங்கா அருகில் சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நடந்தது. மாநகர் மாவட்ட. செயலாளர் ஜி.வெங்கடாஜலம் தலைமை தாங்கி எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கட்சி கொடியேற்றி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பேசுகையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியை திறம்பட நடத்தி வருகிறார். வருகிற 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்-அமைச்சராக்க கட்சி தொண்டர்கள் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் பாலசுப்ரமணியம் எம்.எல்.ஏ, அவைத்தலைவர் பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எம்.கே.செல்வராஜு, ரவிச்சந்திரன், பொருளாளர் பங்க் வெங்கடாஜலம், ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் செங்கோட்டையன், பொதுக்குழு உறுப்பினர் ஜான்கென்னடி, பகுதி செயலாளர்கள் யாதவமூர்த்தி, பாலு, சரவணன், முருகன், ஜெயபிரகாஷ், சண்முகம், பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.