< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
செங்கோட்டையில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா
|19 Jan 2023 12:15 AM IST
செங்கோட்டையில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
செங்கோட்டை:
செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு தென்காசி வடக்கு மாவட்டம் மற்றும் நகர அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட துணைச்செயலாளா் பொய்கை சோ.மாரியப்பன், மாவட்ட பொருளாளா் சண்முகையா, நகர்மன்ற தலைவா் ராமலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனா். நகரச்செயலாளா் கணேசன் வரவேற்றார். அதனை தொடா்ந்து அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். உருவ படத்திற்கு கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினா்கள், முன்னாள் நகர்மன்ற உறுப்பினா்கள் உள்பட நிர்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.