< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
எம்.ஜி.ஆர். சிலைக்கு அய்யாத்துரை பாண்டியன் மரியாதை
|5 Oct 2023 1:32 AM IST
சுரண்டையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அய்யாத்துரை பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சுரண்டை:
அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள சங்கரன்கோவில் தொழிலதிபர் அய்யாத்துரை பாண்டியனுக்கு நகர செயலாளரும், மாவட்ட திட்டக்குழு உறுப்பினருமான சக்திவேல் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் அண்ணா சிலை, எம்.ஜி.ஆர். சிலை மற்றும் ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு அய்யாத்துரை பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் கோட்டைச்சாமி பாண்டியன், ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.