< Back
மாநில செய்திகள்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 21,500 கன அடியாக சரிவு
மாநில செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 21,500 கன அடியாக சரிவு

தினத்தந்தி
|
27 Oct 2022 9:42 AM IST

அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் அணை நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீடிக்கிறது.

மேட்டூர்,

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் தீவிரம் குறைந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. நேற்று விநாடிக்கு 30 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 21 ஆயிரத்து 500 கன அடியாக சரிந்தது.

அணையில் இருந்து விநாடிக்கு 22 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதில் நீர்மின் நிலையங்கள் வழியாக காவிரி ஆற்றில் விநாடிக்கு 21 ஆயிரத்து 500 கன அடி தண்ணீரும், கால்வாயில் 750 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளன.

உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அதாவது கடந்த 12-ந்தேதியில் இருந்து 16 கண் மதகுகள் வழியாக நீர் திறந்து விடப்பட்ட நிலையில் நேற்று முதல் நீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் அணை நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீடிக்கிறது.

மேலும் செய்திகள்