< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மேட்டூர் அணை நீர்மட்டம் 58.15 அடியை எட்டியது...!
|11 Nov 2023 10:56 AM IST
அணையில் இருந்து வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் குடிநீர் தேவைக்காக வெளியேற்றப்பட்டு வருகிறது.
சேலம்,
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த மாதம் 10-ந்தேதியுடன் நிறுத்தப்பட்டது. இதையடுத்து தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு 8 ஆயிரத்து 424 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 58.15 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் குடிநீர் தேவைக்காக வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது மேட்டூர் அணையில் 23.32 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.