< Back
மாநில செய்திகள்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6,417 கனஅடியாக அதிகரிப்பு
சேலம்
மாநில செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6,417 கனஅடியாக அதிகரிப்பு

தினத்தந்தி
|
7 Jun 2022 1:11 AM IST

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரத்து 417 கன அடியாக அதிகரித்து உள்ளது.

மேட்டூர்:

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரத்து 417 கன அடியாக அதிகரித்து உள்ளது.

நீர்வரத்து அதிகரிப்பு

தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மழையின் அளவு குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 77 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த மழை தீவிரம் அடைந்துள்ளதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து திடீரென அதிகரித்து உள்ளது.

6,417 கனஅடி

நேற்று காலை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரத்து 417 கனஅடியாக அதிகரித்துள்ளது. பாசனத்துக்காக வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 114.63 அடியாக இருந்தது.

மேலும் செய்திகள்