< Back
மாநில செய்திகள்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

தினத்தந்தி
|
7 Nov 2023 8:53 AM IST

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டும் வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

சேலம்,

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது. அணையின் நீர்மட்டம் 53.53 அடியாக இருந்த நிலையில், தற்போது 53.80 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 20.28 டிஎம்சி ஆக உள்ளது.

அத்துடன், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 2,238 கன அடியில் இருந்து 2,702 கன அடியாக உயர்ந்துள்ளது. தற்போது அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டும் வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்