சேலம்
மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது
|மேட்டூர் அணை நீர்மட்டம் 3 நாட்களில் 2 அடி குறைந்துள்ளது
மேட்டூர்
மேட்டூர் அணை நீர்மட்டம் 3 நாட்களில் 2 அடி குறைந்துள்ளது.
மேட்டூர் அணை
மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். அன்று காலை அணையின் நீர்மட்டம் 103.35 அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
இதற்கிடையே அணைக்கு நீர்வரத்தும் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. நேற்று (வியாழக்கிழமை) காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 522 கனஅடியாக குறைந்துள்ளது.
2 அடி குறைந்தது
அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
அதாவது 103.35 அடியாக இருந்த நீர்மட்டம் கடந்த 3 நாட்களில் 2 அடி குறைந்து நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 101.58 அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.