< Back
மாநில செய்திகள்
மேட்டூர் அணை 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பு நிறுத்தம்
சேலம்
மாநில செய்திகள்

மேட்டூர் அணை 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பு நிறுத்தம்

தினத்தந்தி
|
6 Nov 2022 1:00 AM IST

மேட்டூர் அணை 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பது நேற்று காலை நிறுத்தப்பட்டது.

மேட்டூர்:-

மேட்டூர் அணை 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பது நேற்று காலை நிறுத்தப்பட்டது.

மேட்டூர் அணை

மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியை எட்டி நிரம்பியுள்ள நிலையில் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடிக்கு மேல் அதிகரிக்கும் நேரங்களில் அணையின் உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பது வழக்கம்.

இதன் அடிப்படையில் கடந்த 1-ந் தேதி மாலை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடிக்கு மேல் அதிகரித்தது. அன்று இரவு முதல் 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 4 ஆயிரத்து 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

தண்ணீர் திறப்பு நிறுத்தம்

16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பு தொடர்ந்து 4 நாட்களாக நீடித்து வந்தது. நேற்று காலை நீர்வரத்து வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடிக்கு கீழ் குறைந்தது. இதன் காரணமாக நேற்று காலை 9 மணி முதல் 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மாலை 4 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக குறைந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்