< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மேட்டுப்பாளையம் மலை ரெயில் சேவை ரத்து - ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு
|8 Dec 2023 7:50 AM IST
பாதுகாப்பு கருதி மலை ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை,
மழை காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் நிலையில், பாதுகாப்பு கருதி மலை ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மண் சரிவு ஏற்பட்டு கடந்த நவம்பர் 22-ந்தேதி முதல் மலை ரெயில் சேவை இயக்கப்படாமல் இருந்தது. பாதை சரிசெய்யப்பட்டு இன்று முதல் மலை ரெயில் சேவை தொடங்க இருந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக மீண்டும் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.