< Back
மாநில செய்திகள்
ஞாயிறு அட்டவணைப்படி இன்று மெட்ரோ ரெயில்கள் இயக்கம்
மாநில செய்திகள்

ஞாயிறு அட்டவணைப்படி இன்று மெட்ரோ ரெயில்கள் இயக்கம்

தினத்தந்தி
|
11 April 2024 7:01 AM IST

ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.

சென்னை,

ரம்ஜான் பண்டிகையையொட்டி இன்று அரசு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக சென்னையில் இன்று ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 8 மணி முதல் மதியம் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்