< Back
மாநில செய்திகள்

கோப்புப்படம்
மாநில செய்திகள்
மெட்ரோ ரெயில்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணையில் இயக்கம்

17 Jan 2024 10:12 AM IST
காணும் பொங்கலை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணையில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
பொங்கல் பண்டிகையையொட்டி ஏராளமான மக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதனால் மெட்ரோ ரெயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டன.
இந்த நிலையில் காணும் பொங்கலை முன்னிட்டு இன்றும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை சீரான இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.