< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நாளை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்..
|16 March 2024 3:27 PM IST
மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதால் நாளை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை கோடம்பாக்கம்- தாம்பரம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை கடற்கரை-தாம்பரம், சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் காலை 11 முதல் மாலை 4.30 மணி வரை 44ரெயில்கள் ரத்து செய்யப்படும் என தெற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது .
6வது வாரமாக ஞாயிற்றுக்கிழமைகளில் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதால் ரெயில் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இந்த நிலையில் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதால் நாளை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.