< Back
மாநில செய்திகள்
ஆழ்வார்பேட்டை லஸ் சர்ச் சாலையில் மெட்ரோ ரெயில் பணி நாளை முதல் போக்குவரத்து மாற்றம்
சென்னை
மாநில செய்திகள்

ஆழ்வார்பேட்டை லஸ் சர்ச் சாலையில் மெட்ரோ ரெயில் பணி நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

தினத்தந்தி
|
7 Oct 2022 2:30 PM IST

சென்னை போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை ஆழ்வார்பேட்டை லஸ் சர்ச் சாலையில் மெட்ரோ ரெயில் பணிகள் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, லஸ் சர்ச் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு வார காலத்துக்கு சோதனை அடிப்படையில் 8-ந் தேதி (நாளை) முதல் லஸ் சந்திப்பிலிருந்து லஸ் சர்ச் சாலை வழியாக டி.டி.கே சாலைக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் மாற்று பாதையில் அனுப்ப உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநகர பஸ்கள் அமிர்தாஞ்சன் சந்திப்பிலிருந்து ராயப்பேட்டை நெடுஞ்சாலை, டாக்டர் ஆர்.கே.சாலை, மியூசிக் அகாடமி மேம்பால சர்வீஸ் சாலை, டி.டி.கே. மேம்பால சர்வீஸ் சாலை வழியாகவும், இலகு ரக வாகனங்கள் டி.சில்வா சாலை மற்றும் தேசிகா சாலை வழியாகவும் செல்லலாம். முசிறி சுப்பிரமணியம் சாலையில் போக்குவரத்தில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. இதற்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்