< Back
மாநில செய்திகள்
மெட்ரோ பணி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்
மாநில செய்திகள்

மெட்ரோ பணி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்

தினத்தந்தி
|
11 Feb 2024 10:50 AM IST

மெட்ரோ நிலைய கட்டுமான பணிக்காக சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது

சென்னை,

சென்னை போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,

சேத்துப்பட்டில் இருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் காலேஜ் ரோடு, ஹாடோஸ் ரோடு, உத்தமர் காந்தி சாலை வழியாக ஜெமினி மேம்பாலத்தை அடையும் வகையில் செல்லும் (ஏற்கனவே உள்ளபடி). இந்த பாதை ஒரு வழிப்பாதையாக செயல்படுத்தப்படும்.

இதேபோல், ஜெமினி மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் , உத்தமர் காந்தி சாலை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை (டாக்டா் எம்.ஜி.ஆர். சாலை) வழியாக வள்ளுவர் கோட்டம் நோக்கி சென்று தங்கள் இலக்கை அடையலாம். (மாற்றுப்பாதை - ஒரு வழிப்பாதை).

அமைந்தகரை நோக்கிச் செல்லும் வாகனங்கள் டேங்க் பண்ட் சாலையில் (இடதுபுறம்) திரும்பி நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக அமைந்தக்கரை மற்றும் பிற இடங்களுக்குச் செல்லலாம். (எற்கனவே உள்ளபடி).

வள்ளுவர் கோட்டத்திலிருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் வள்ளுவர் கோட்டம் சந்திப்பில், வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, உத்தமர் காந்தி சாலை வழியாகத் திருப்பி விடப்பட்டு அண்ணா மேம்பாலம் அல்லது வலதுபுறம் திரும்பி திருமலைபிள்ளை ரோடு, G.N. செட்டி ரோடு வழியாக அண்ணா மேம்பாலம் (ஜெமினி மேம்பாலம்) சென்று அடையலாம்.

மற்ற பிற உள்பற சாலைகள் அனைத்தும் மேற்கண்ட ஒருவழிபாதை போக்குவரத்து மாற்றத்திற்கு தகுந்தபடி போக்குவரத்து அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் செய்திகள்