< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மெட்ரோ கட்டுமானப் பணி : ஓ.எம்.ஆர். சாலையில் போக்குவரத்து மாற்றம்
|28 March 2024 8:32 PM IST
போக்குவரத்து மாற்றமானது 30ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.
சென்னை,
சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,
சென்னை மெட்ரோ ரெயில் கட்டுமான பணி பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள தரமணி மற்றும் கந்தன்சாவடி சாலையில் மேற்கொள்ளப்பட உள்ளதால், பின்வரும் சாலைகளில் போக்குவரத்து மாற்றமானது வருகின்ற 30.03.2024 முதல் ஒரு வாரத்திற்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.
அடையாறு மற்றும் திருவான்மியூரில் இருந்து வரும் வாகனங்கள் வேளச்சேரி நோக்கி SRP சந்திப்பில் வலதுபுறம் திரும்ப தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, அவர்கள் YMCA முன்பு புதிய "யு" திருப்பம் செய்து, SRP சந்திப்பில் இடதுபுறமாக திரும்பி தங்கள் செல்ல வேண்டிய இலக்கை அடையலாம்.என தெரிவிக்கப்பட்டுள்ளது.