< Back
மாநில செய்திகள்
மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசும்-  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தூத்துக்குடி
மாநில செய்திகள்

மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசும்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தினத்தந்தி
|
11 Sept 2022 8:19 PM IST

தூத்துக்குடி அருகே உள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இன்று (திங்கட்கிழமை) பலத்த சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது

தூத்துக்குடி அருகே உள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இன்று (திங்கட்கிழமை) பலத்த சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்

ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தெற்கு ஒடிசா பகுதியில் நிலவுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்க கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

சூறாவளி காற்று

இதனால் மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள், இலங்கை கடற்கரை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதனால் அந்த பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

புயல் எச்சரிக்கை கூண்டு

இதே போன்று வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதை கப்பல்களுக்கு உணர்த்தும் வகையில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் நேற்று காலையில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

ஆனால் மதியத்துக்கு பிறகு எச்சரிக்கை விலக்கி கொள்ளப்பட்டதால், கூண்டு இறக்கப்பட்டது.

மேலும் செய்திகள்