கரூர்
அரசு பள்ளியில் வேலைவாய்ப்பு குறித்த வழிகாட்டி நிகழ்ச்சி
|அரசு பள்ளியில் வேலைவாய்ப்பு குறித்த வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது.
புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நான் முதல்வன்- உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் வளர்மதி தலைமை தாங்கினார். உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி ஆசிரியர் குப்புசாமி தமிழக அரசின் நான் முதல்வன் திட்டம் மற்றும் உயர்கல்வி வேலைவாய்ப்பு, நுழைவுத்தேர்வுகள் குறித்து எடுத்துரைத்தார். ஆகஸ்டு முதல் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு 2-வது வாரம் மற்றும் 4-வது வாரங்களில் நடைபெறும் வகுப்புகள் குறித்து விளக்கப்பட்டது. கடந்த ஆண்டு கரூர் கலெக்டர் தலைமையில் நடந்த நான் முதல்வன்-உயர்கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டி சிறப்பு முகாம் மூலம் பயன்பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்கள் சேர்ந்து படிக்கும் உயர்கல்வி குறித்து விளக்கப்பட்டது. மேலும், மாணவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர். இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.