< Back
மாநில செய்திகள்
வழிகாட்டுதல் நிகழ்ச்சி
சிவகங்கை
மாநில செய்திகள்

வழிகாட்டுதல் நிகழ்ச்சி

தினத்தந்தி
|
30 Jan 2023 12:15 AM IST

மேற்படிப்பு குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இளையான்குடி,

இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி உள்தர உறுதி செல் மற்றும் தொழில் வழிகாட்டல் மற்றும் வேலை வாய்ப்பு செல் ஆகியவை இணைந்து வெளிநாடுகளில் மேற்படிப்பு குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சியை நடத்தியது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முஸ்தாக் அகமதுகான் அனைவரையும் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பிராட் மைண்ட் நிறுவனர் இலா மற்றும் பயிற்சியாளர் முரளி ஆகியோர் கலந்து கொண்டு வெளிநாடுகளில் உயர்கல்வி பயில விரும்பும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் பாடப்பிரிவுகள், சலுகைகள் மற்றும் அரசின் உதவித்தொகைகள் குறித்து பேசினர்.

நிகழ்வினை வணிகவியல் துறை உதவி பேராசிரியர் நாசர் ஒருங்கிணைத்தார். இறுதியாக தொழில் வழிகாட்டல் மற்றும் வேலை வாய்ப்புகள் ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் இப்ராஹிம் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்