< Back
மாநில செய்திகள்
மனநல விழிப்புணர்வு பேரணி
நீலகிரி
மாநில செய்திகள்

மனநல விழிப்புணர்வு பேரணி

தினத்தந்தி
|
13 Oct 2023 2:45 AM IST

ஊட்டியில் மனநல விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

ஊட்டியில் மனநல விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மனநல விழிப்புணர்வு

உலக மனநல நாள் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 10-ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி மனநலத்தை பேணி காப்பது மனித உரிமை என்ற கருப்புபொருள் அடிப்படையில் நீலகிரி மாவட்ட மருத்துவம் மற்றும் உடல்நலத்துறையின் மனநல திட்டம் சார்பில் உலக மனநல நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஊட்டியில் நடைபெற்றது. இதற்கு மருத்துவ பணிகள் இணை இயக்குனர் பழனிசாமி முன்னிலை வகித்தார். கோவை மனநல மீளாய்வு மன்ற தலைவர் ராஜ் தலைமை தாங்கி பேசினார்.

இதைத்தொடர்ந்து மனநலம் சம்பந்தமான தலைப்புகளான போதைப்பழக்கம் ஒழிப்பு, தற்கொலை சரியா, தவறா, இணையத்திற்கு அடிமையாதல், செல்போனுக்கு அடிமையாதல் போன்ற தலைப்புகளில் ஓவியம் மற்றும் பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டது.

விழிப்புணர்வு பேரணி

இதில் முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முன்னதாக மனநலன் குன்றிய குழந்தைகள் பங்கேற்ற நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் மாவட்ட மன நல திட்ட டாக்டர்கள் பூர்னஜித், ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதை டீன் பத்மினி தொடங்கி வைத்தார். அப்போது அவருடன் இருப்பிட மருத்துவ அலுவலர் ரவிசங்கர், உதவி மருந்துவ அலுவலர் மணிகண்டன், மனநல மருத்துவத்துறை தலைவர் விவேக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்