< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
மெஞ்ஞானபுரம் பள்ளியில்மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி
|1 Aug 2023 12:15 AM IST
மெஞ்ஞானபுரம் பள்ளியில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மெஞ்ஞானபுரம்:
மெஞ்ஞானபுரம் எலியட் டக்ஸ் போர்டு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் தமிழக அரசின் சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தாளாளர் சசிகுமார் பொன்னுதுரை தலைமை தாங்கினார். மெஞ்ஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருபாராஜபிரபு முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை ஜேஸ்மின் ஜோன் செல்வினா வரவேற்று பேசினார். முன்னதாக கனம் ஜாண்தாமஸ் சபை மன்ற தலைவர் டேனியல் எட்வின் ஜெபம் செய்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மாவட்ட கவுன்சிலர் ஜெசி பொன்ராணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பள்ளி மாணவிகளுக்கு அரசின் இலவச சைக்கிள்களை வழங்கிப் பேசினார். நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் செல்வின், வியாபாரிகள் சங்க தலைவர் ராஜாபிரபு உளபட பலர் கலந்து கொண்டனர்.