< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி, ஓசூரில் காங்கிரஸ் சார்பில்ராஜீவ்காந்தி நினைவு தினம் கடைபிடிப்பு
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

கிருஷ்ணகிரி, ஓசூரில் காங்கிரஸ் சார்பில்ராஜீவ்காந்தி நினைவு தினம் கடைபிடிப்பு

தினத்தந்தி
|
23 May 2023 11:00 AM IST

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி, ஓசூரில் காங்கிரஸ் சார்பில் ராஜீவ்காந்தி நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.

ராஜீவ்காந்தி நினைவு தினம்

கிருஷ்ணகிரி பழையப்பேட்டை ஆட்டோ ஸ்டாண்டு அருகில் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் தலைவர் முபாரக் தலைமை தாங்கினார். மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் சேகர், முன்னாள் மாவட்ட தலைவர் அக.கிருஷ்ணமூர்த்தி, மாநில பேச்சாளர் நாஞ்சில் ஜேசு, எஸ்.சி. பிரிவு மாநில அமைப்பாளர் ஆறுமுக சுப்பிரமணி, முன்னாள் நகர தலைவர்கள் வின்சென்ட், ரமேஷ் அர்னால்டு ஆகியோர் ராஜீவ்காந்தி உருவப்படத்திற்கு, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து கட்சியினர் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாளர் பாண்டுரங்கன், வக்கீல் ஆசாத் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல மத்தூர், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, பர்கூர் என மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள ராஜீவ்காந்தியின் சிலைகளுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ஓசூர்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஓசூரில் ராஜீவ் காந்தி நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. எம்.ஜி. ரோட்டில் உள்ள காந்தி சிலை அருகிலும், மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலும் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை தாங்கி, ராஜீவ் காந்தி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, கட்சியினர் தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர்.

இதில், மாவட்ட பொருளாளர் மாதேஷ் என்ற மகாதேவன், மாநகர தலைவர் தியாகராஜன், சிவப்பா ரெட்டி, மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி சரோஜா, ஓ.பி.சி.அணி நிர்வாகி குமார், தமிழ்வாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்